This blog will share the journey of my life...

Friday, April 26, 2019

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் ஒரு அழகான நாள்...
பத்தாம் வகுப்பு தேறிவிட்டு அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளை...வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது...கணிப்போறி என்றால் என்ன என்றே சரியாக தெரியாமல் இருந்த நாட்கள்...மொபைல் போன்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன்...யாராவது வைத்திருந்தால் என்னமோ உலக அதிசயம் போல பார்த்த நாட்கள்...

வாழ்வின் எளிமையான நாட்கள் அது...கணிப்பொறி அறிவியல் தவிர வேறு எது வேணா படிக்க தயார் என எண்ணி இருந்த நாட்கள்...நீல வானத்தையும் அதில் மின்னும் பல கோடி நட்சத்திரங்களையும் பார்த்தபடி கழித்த நாட்கள்...முடிவிலா பெரு வெளியையும் அதன் அளவறிய முடியா பிரம்மாண்டமான நிலையையும் நினைத்து ஆச்சர்யப்பட்டு அமர்ந்திருந்த நாட்கள்....எவ்வளவு நேரம் பார்க்கிறேன் என எனக்கே தெரியாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்த நாட்கள்...பலநாட்கள் அந்த பிரம்மாண்டமான பேரண்டத்தையும்...அதில் மின்னும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டு வியந்திருக்கிறேன்...

எங்கள் வீட்டில் டிவி இல்லை...எங்கள் ஊரில் சினிமா தியேட்டர் கிடையாது...எனக்கு தெரிந்தவரையில் அப்போது யாரிடமும் மொபைல் போனே கிடையாது ...எந்த முகப்புத்தகமும் கிடையாது...வாட்ஸ்அப் அதில் ஒரு லாஸ்ட் சீன் என எதுவுமே கிடையாது என்னிடம்... .ஆனால் என்வாழ்க்கை மிக அற்புதமாயிருந்தது...எனக்கு உலக நடப்புகள் உடனுக்குடன் தெரியாது...யார் நினைத்தாலும் உடனே தொடர்பு கொள்ள முடியாது...ஆனால் நான் இந்த உலகுடன் வாழ்ந்தேன்..என்னுடன் இருப்பவர்களுடன் வாழ்ந்தேன்...இந்த இயற்கையுடன் வளர்ந்தேன்....

நினைத்துப்பார்க்கையில் தெரிகிறது...என்ன இழந்துவிட்டேன் என்று....மாத வீட்டு வருமானம் ஆயிரத்து ஐநூறு...மாளிகை சாமானுக்கு அறுநூற்று ஐம்பது வரை...பால் மற்றும் தயிருக்கு 200 ரூபாய்...என திட்டமிட்டு வாழ்ந்த வாழ்க்கை அப்போது...இன்று ஒரு நாள் வருமானமே ஆயிரத்தை தாண்டினாலும் அன்று இருந்த அந்த மகிழ்ச்சி இங்கு இல்லை என்பதே நிதர்சனம்...நினைத்துப்பார்க்கிறேன்....கடைசியாக இந்த பிரம்மாண்டமான நீல வான் வெளியையும் அந்த அழகான நட்சத்திரங்களையும் ரசித்தது எப்போது என...எனக்கே நினைவில் இல்லை...வானத்தை அண்ணாந்து பார்க்கவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்...என்? சந்தோஷமாக இருக்க தான்..ஆனால் என்ன சந்தோஷமோ தெரியவில்லை...

என் வாழ்க்கையில் பாதிநேரம் கையில் இருக்கும் 5 இன்ச் அகல திரையை பார்க்கவே நேரம் போதவில்லை பின் எப்படி அந்த ஆயிரமாயிரம் அடி அகல திரையை பார்க்க நேரம் கிடைக்கும்...அந்த நீல வானத்தையும் அதில் சொகுசாக மெல்ல மெல்ல அசைந்து போகும் வெள்ளை மேகத்தையும் பார்க்க ஏது நேரம்..யார் என்ன புரோபைல் வைச்சிருக்கங்கனு பாக்க தானே நேரம் இருக்கு எனக்கு....அந்தி மாலை நேரத்தில் பல வண்ண நிற ஜாலங்களை காட்டியடி தினமும் மறையும் சூரியன்...இப்படி தினமும் நடக்கிறது அதிசயம்...அதையெல்லாம் யாருய்யா பாத்துகிட்டு இருப்பாங்க....எங்கயாவது சன்செட் பாயிண்டுக்கு போனமா...அங்க போயும் சூரியன பாக்காம ரெண்டு போட்டோவ எடுத்தோமா அத முகப்புத்தகத்துல போட்டு லைக்ஸ் வாங்குனமானு இருக்கனும்டா இவன் என்ன சூரிய அஸ்தமனத்த பாரு அதிசயம் அது இதுனு உளரீட்டு இருக்கான்...ஆமங்க உங்க மைன்ட் வாஸ்ஸேதான்..ஏன் என்னோட இன்னூரு மைன்ட் வாய்ஸ்உம்தான்....

சின்ன சின்ன விசயங்களும் அதிசயம் தான்...நான் ஒரு அதிசயம் நீங்கள் ஒரு அதிசயம்...இந்த பூமியில் வந்து பிறப்பதற்கு ஒன்னுல நாற்பதாயிரம் கோடி பங்கு வாய்ப்புதான் இருக்குது....இப்போ இதை நீங்க படிச்சிட்டு இருந்தீங்கன்னா...நீங்க அந்த ஒன்னுல நாற்பதாயிரம் கோடி பங்குல உருவான ஒரு அற்புதமான பிறவி...

சரி சொல்ல வந்த விசயத்தையே விட்டுட்டு என்னன்னலாமோ சொல்லீட்டே பொறேன் பாருங்க...

2006 ல ஒரு இயந்திரப்பறவை அந்த அண்ட வெளில பறக்க ஆரம்பிச்சுது...இன்னிக்கு 9 வருடம் கழிச்சு 2015 ல.. 200 கோடிக்கும் மேலான கிலோமீட்டர் தாண்டி புளூட்டோவை நெருங்கி ஒரு போட்டோ எடுத்து அனுப்பி விட்ருச்சி...அதுதாங்க செய்தி...!!

வாழ்க்கை அற்புதமானது :)
வாருங்கள் வாழ்வோம் :)