This blog will share the journey of my life...

Sunday, December 8, 2013

வாழ்க்கையும் நாமும்....

இந்த வாழ்க்கையில் நாம் அனைவருமே ஏதோ ஒரு சமையத்தில் கெட்டவனாக இருந்திருக்கிறோம்...

அது காதலால் இருக்கலாம்..பணமாக இருக்கலாம்.. நம் சந்தோஷமாக இருக்கலாம்...எதுவாக இருந்தாலும் நம் அனைவருக்குமே இரண்டாவது பக்கம் இருக்கிறது...அந்த பக்கம் பொதுவாக எல்லொருக்கும் தெரிவது இல்லை... இந்த வாழ்வில் நல்லது கெட்டது என நாம் அறிவது நம்மைச்சுற்றி உள்ளவைகள்தான்...

இந்தியாவில் ஒரு பெண் 18 வயதில் திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அது தவறு.. அதுவே அமெரிக்காவில் 18 வயதில் அது அனுமதிக்கப்படுகிறது...எனவே எது தவறு எது சரி?

இந்திய படைவீரர் ஒரு பாக்கிஸ்தான் படைவீரரை சுட்டு வீழ்த்துகிறார்.. அவர் இந்திய படைக்கு திரும்பி வந்தால் அவருக்கு பாராட்டும் கவுரவமும் கிடைக்கும்...அதுவே பாக்கிஸ்தான் ராணுவத்தில் மாட்டினால்? அவ்வளவுதான்..எனவே எது தவறு எது சரி என பார்ப்பது எப்போதுமே ஒரு மாயையாகவே இருக்கிறது...

அப்படியானால் சூழ்நிலைகள்தான் ஒரு விடயத்தை நல்லது கெட்டது என பிரித்து அறிய வைக்கிறதா? இருக்கலாம்...
நம்வாழ்வில் நாம் எவ்வளவோ கற்றுக்கொண்டிருக்கிறோம்...இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்...
சமூகததில் பேச பயப்படும் விடயங்கள்...பேசாத விடயங்கள் அனைத்தையும் பேசப்போகிறேன்..இது என் டைரி...

என்வாழ்க்கை...என் நினைவுகள்..என் கோணங்கள்....இது முழுக்க என் எண்ணங்கள் தான்....